உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாஜி., கவுன்சிலர் சாலை மறியல்

மாஜி., கவுன்சிலர் சாலை மறியல்

திருப்பூர் : மாநகராட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு தராததால், ஆத்திரமடைந்த முன்னாள் கவுன்சிலர் தேவராஜ், தன் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஒருங்கிணைக்கப்படாத திருப்பூர் மாநகராட்சியில், 46வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் தேவராஜ் (அ.தி.மு.க.,); வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தேவராஜூக்கு கட்சி தலைமை வாய்ப்பு தரவில்லை. ஆத்திரமடைந்த அவர், ஆதரவாளர்களுடன் காங்கயம் கிராஸ் ரோடு சிக்னல் அருகில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார், தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி கலைய வைத்தனர். இம்மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Moorthy
செப் 22, 2025 19:00

ஆக மொத்தம் அப்பாவு சொல்ல வருவது இதுதான். விஜய்க்கு வோட்டு போட்டிங்கன்னா பாஜாகா உள்ள பூந்துரும்


உண்மை கசக்கும்
செப் 22, 2025 18:28

ரெண்டு பேரும் ஒரே மதமாற்ற கட்சி. சிம்மா வெளியில் திட்டிக்கொண்டே இருப்பது போல் நடிப்பது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை