உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மடத்துக்குளம் ஒன்றியத்தில் 441 பேர் வேட்புமனு தாக்கல்

மடத்துக்குளம் ஒன்றியத்தில் 441 பேர் வேட்புமனு தாக்கல்

மடத்துக்குளம் : உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, கட்சி பிரமுகர்கள் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர். இந்த ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளும், நான்கு பேரூராட்சிகளில் 35 ஆயிரத்து 356 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் 76 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 170 மனுக்களும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 38 மனுக்களும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 34 மனுக்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஐந்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி தலைவர் பதவிக்கு 68 மனுக்களும்,ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 308 மனுக்களும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 58 மனுக்களும், மாவட்ட உறுப்பினர் பதவிக்கு ஏழு உட்பட மொத்தம் 441 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ