உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆரம்ப சுகாதார மையத்தை தரம் உயர்த்த வேண்டுகோள்

ஆரம்ப சுகாதார மையத்தை தரம் உயர்த்த வேண்டுகோள்

மடத்துக்குளம் : மடத்துக்குளம் துங்காவியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மையத்தை அனைத்து வசதிகளுடைய மையமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை-காரத்தொழுவு ரோட்டில் அமைந்துள்ள துங்காவி ஆரம்ப சுகாதாரமையத்தை நாட்டுக்கல்பாளயம், மெட்ராத்தி, தாந்தோனி, ஜோத்தம்பட்டி, வேடபட்டி சுற்றுப்பகுதியிலுள்ள உள்ள 30 ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மையம் தற்போது குறைந்த அளவு வசதிகளுடன் இயங்கி வருகிறது. தினமும் 200 முதல் 300 பேர்அவசர சிகிச்øõகவும், முதலுதவிக்காகவும் வருகின்றனர். இங்கு படுக்கை,லேப் உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாததால் வருபவர்களுக்கு போதிய சிகிச்சை வழங்கமுடிவதில்லை. தற்போது இந்த பகுதியில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் மேல் சிகிச்சைக்காக மக்கள் 10 கி.மீ., தொலைவில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்நிலையில் செயல்பட்டு வரும் துங்காவி ஆரம்ப சுகாதார மையத்தை தரம் உயர்த்தி அதிகளவு படுக்கை வசதி மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள மையமாக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ