உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலிதீன் கவர் பயன்பாடு தடுக்க வலியுறுத்தல்

பாலிதீன் கவர் பயன்பாடு தடுக்க வலியுறுத்தல்

மடத்துக்குளம் : உணவகம் மற்றும் 'டீ'க்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 20 மைக்ரானுக்கு அதிகம் உள்ள பாலிதீன் கவர்களை பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மடத்துக்குளம் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மில்கள், பள்ளி, கல்லூரி, மாவுமில், செங்கல் சூளைகள், பல்வேறு தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இங்கு தினசரி பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து திரும்புகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் உணவகங்களை பயன்படுத்துகின்றனர். இப்பகுதி கடைகளில் 20 'மைக்ரான்' அதிகம் உள்ள பாலிதீன் கவர்கள், கப் ஆகியவற்றில் உணவுப்பொருள் வினியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய்தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை