உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டை ஆக்கிரமித்திருந்த 60 போர்டு அகற்றம்

ரோட்டை ஆக்கிரமித்திருந்த 60 போர்டு அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் அவிநாசி ரோட்டில் ஆக்கிரமித்து வைத்திருந்த போர்டுகளை போக்குவரத்து போலீசார் நேற்று அகற்றினர். திருப்பூர் அவிநாசி ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. ரோட்டோரங்களில் வைக்கப்படும் பேனர் தட்டிகள், விளம்பர போர்டுகள் மற்றும் இரும்புதட்டிகளால் ரோட்டில் நெரிசல் அதிகரித்து வருகிறது.வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் இருந்து வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை ரோட்டின் இருபுறங்களிலும் இருந்த தட்டிகள் மற்றும் போர்டுகளை போலீசார் அகற்றினர். 60க்கும் மேற்பட்ட போர்டுகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி