உள்ளூர் செய்திகள்

மா.கம்யூ., கூட்டம்

திருப்பூர் : பெருமாநல்லூர் வடக்கு கிளை மா.கம்யூ., கூட்டம் நடந்தது. கிளை செயலாளராக சிவலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணியம், சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.'ஆதிதிராவிடர் காலனியில் மயானம் ஏற்படுத்தி தர வேண்டும்; வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோர் பெருமாநல்லூர் அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்லநடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய நெடுஞ்சாலையான புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்துவது; கொசு மருந்து தெளிக்க கோரிக்கை வைப்பது; அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு துவங்க வலியுறுத்துவது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !