உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில போட்டிக்கு மாணவ, மாணவியர் தேர்வு

மாநில போட்டிக்கு மாணவ, மாணவியர் தேர்வு

திருப்பூர் : தி.மு.க., இளைஞரணி சார்பில், மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாநில இளைஞரணி துணை செயலாளரான சுகவனம் எம்.பி., போட்டியை துவக்கி வைத்தார்.வெற்றி பெற்றோர் விவரம்: பேச்சு போட்டி: திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மாணவி கலைவாணி முதலிடம்; காரத்தொழுவு அரசு பள்ளி மாணவர் செல்வராஜ் இரண்டாமிடம்; பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு பள்ளி மாணவர் மூர்த்தி மூன்றாமிடம்.கட்டுரைப் போட்டி: ஜெய்வாபாய் பள்ளி மாணவி கீர்த்தனா முதலிடம்; கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவர் தருண்குமார் இரண்டாமிடம்; உடுமலை சீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவர் மோகன் பிரதீப் மூன்றாமிடம். கவிதை ஒப்புவித்தல் போட்டி: ஜெய்வாபாய் பள்ளி மாணவி வினோதினி முதலிடம்; நஞ்சப்பா பள்ளி மாணவர் பாலாஜி இரண்டாமிடம்; லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி மாணவி மணிப்பிரியா மூன்றாமிடம் பெற்றனர்; 10 பேர் ஆறுதல் பரிசு பெற்றனர். மூன்று போட்டிகளிலும் முதல் இரு இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், வரும் 24, 25ல் காஞ்சிபுரத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது; மாவட்ட தி.மு.க., செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்து, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வரவேற்றார். அவை தலைவர் சிவசபாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ