உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

திருப்பூர் : இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை திருப்பூர் பிஷப் உபகாரசாமி பள்ளி அருகில் நேற்று துவக்கி வைத்து, இலங்கை மட்டக்களப்பு எம்.பி., நந்திகோடி யோகேஸ்வரன் பேசியதாவது: உலகத்தில் இருக்கும் மதங்களில் இந்து மதம் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா, 80 சதவீத இந்துக்களை கொண்டது. விநாயகர் சதுர்த்தி விழாக்கள், இந்துக்களின் எழுச்சியை வெளிப்படுத்துகின்றன. பார்வையிட்ட பல்வேறு இடங்களிலும் பூஜை களும், ஊர்வலங்களும் சிறப்பாக உள்ளன. விநாயகரை முன்னிறுத்தி செய்யப்படும் இவ்விழாக்களில், இந்துக்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு தெரிகிறது. இந்துக்கள், இத்தகைய பண்பாடு விழா நிகழ்ச்சிகளின்போது, பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை