| ADDED : செப் 18, 2011 09:35 PM
உடுமலை : பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி அணிகளுக்கிடையேயான கிரிக்கெட்
போட்டியில், நாளை இறுதி போட்டி நடைபெறுகிறது.உடுமலை அரசு கலைக்கல்லூரியில்,
பாரதியார் பல்லைக்கழக அணிகளுக்கிடையேயான 'சி' மண்டல கிரிக்கெட் போட்டிகள்
கடந்த 12ம் தேதி துவங்கியது. பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோவை
நேருவித்யாலயா கல்லூரி அணியும், பொள்ளாச்சி சுபாஷ் கல்லூரியும் மோதின.
இதில், நேருவித்யாலயா கல்லூரி அணி வெற்றி பெற்றது. உடுமலை வித்யாசாகர் கலை
அறிவியல் கல்லூரி அணியும், கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரி அணியும் மோதின.
இதில், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது. கோவை
கிருஷ்ணா கல்லூரியும், பொள்ளாச்சிராமு கலை அறிவியல் கல்லூரியும் மோதின.
அதில், கோவை கிருஷ்ணா கல்லூரி அணி 86 ரன்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ராமு கல்லூரி அணி ஒரு விக்கெட்
மட்டும் இழந்து ஒன்பது விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. கோவை
ரத்தினம் கல்லூரி அணியும், உடுமலை அரசு கலைக்கல்லூரியும் மோதின. இதில்,
கோவை ரத்தினம் கல்லூரி அணி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்
இழந்தன. பின் ஆடிய உடுமலை அரசு கலைக்கல்லூரி 6 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.கோவை நேரு கல்லூரி அணியும், கோவை டெக்சிட்டி அணியும்
மோதின. முதலில் பேட் செய்த கோவை நேரு அணி 168 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக
பேட் செய்த கோவை டெக்சிட்டி அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை நேரு
அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பொள்ளாச்சி சரஸ்வதி
தியாகராஜா கல்லூரி அணியும், கெடிமேடு கமலம் கலைக்கல்லூரியும் மோதின.இதில், முதலில் பேட் செய்த பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லூரி அணி 180
ரன்களும்; இரண்டவதாக பேட் செய்த கமலம் கல்லூரி 88 ரன்களும் எடுத்தது.
இதில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணி 91 ரன்களில் வெற்றி
பெற்றது.நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில், ராமு கல்லூரியும், நேரு
மகாவித்யாலயா கல்லூரியும் மோதின. முதலில் பேட் செய்த நேரு கல்லூரி அணி 107
ரன்கள் எடுத்தது; ராமு அணி 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.உடுமலை அரசு
கலைக்கல்லூரி அணியும்,வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின.
அதில், முதலில் பேட் செய்த வித்யாசாகர் கல்லூரி அணி 133 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக பேட் செய்த உடுமலை அரசு கலைக்கல்லூரி அணி 24 ஓவரில் இலக்கை எட்டி
வெற்றி பெற்றது.தொடர்ந்து இன்று அரையிறுதி போட்டிகளும்; நாளை இறுதி
போட்டியும் நடைபெறுகிறது.