உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

திருப்பூர் : இந்திய தேசிய கிராமத்தொழிலாளர் சம்மேளனம் சார்பில், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, இயற்கை மரணம் அடைந்த சக்திவேல் என்பவரின் மனைவி கவிதை மணிக்கு 17 ஆயிரம் ரூபாய், ரங்கசாமி மகள் ஜெயலட்சுமிக்கு 17 ஆயிரம், உறுப்பினர் கீதா மணிபிரசவத்துக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்திய தேசிய கிராமத்தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், செந்தில்குமார், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ