உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்ய விகாசினி மாணவியர் அபாரம்

வித்ய விகாசினி மாணவியர் அபாரம்

திருப்பூர் : மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சாதனை புரிந்துள்ளனர். திருப்பூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளின் விளையாட்டு கழகம் சார்பில், திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பள்ளிகள் பங்கேற்ற பெண்களுக்கான 2011-12ம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், பல்லடம் ப்ளுபேர்ட் பள்ளியில் நடந்தன. வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர், இளையோர் பிரிவில் வாலிபால் மற்றும் பீச் வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்றனர். மூத்தோர் பிரிவில், வாலிபால், பீச் வாலிபால், பூப்பந்து, செஸ் போட்டிகளில் முதலிடம், வலைபந்து போட்டியில் இரண்டாமிடம், மேசை பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் இரண்டாமிடம், கேரம் (ஒருவர்) போட்டியில் இரண்டாமிடம், கைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். மிக மூத்தோர் பிரிவில், வாலிபால், பீச் வாலிபால், வலைபந்து ஒற்றையர், இரட்டையர், மேசைபந்து, கேரம் (இருவர்) ஆகிய போட்டிகளில் முதலிடம், பூப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர்.தடகளப் போட்டிகளில், இளையோர் பிரிவில் பாக்கியா, 400 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், ஜோதிமணி, 100 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், மூத்தோர் பிரிவில், ராகவி, தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடம், மிக மூத்தோர் பிரிவில், மைதிலி, ஈட்டி எறிதலில் முதலிடம், சவுமியா, தட்டு எறிதலில் இரண்டாமிடம், ஆனந்தி, குண்டு எறிதலில் மூன்றாமிடம், 4து100 மீ., தொடர் ஓட்டத்தில், சத்திய பிரியா, தாரணி, கீர்த்தனா, சுவாதி மூன்றாமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி முதல்வர் அன்பரசு, ஆலோசகர் முரளிதரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை