உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லூரியில் ரத்ததான முகாம்

கல்லூரியில் ரத்ததான முகாம்

உடுமலை : உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரியின் செஞ்சுருள் மன்றம் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா தலைமை வகித்தார். உடுமலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் இளஞ்செழியன் முன்னிலையில், முகாம் துவங்கியது.கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சுமதி கிருஷ்ணபிரசாத், மாணவிகள் ரத்ததானம் செய்தனர். முகாமில், 52 யூனிட் ரத்தத்தை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் ரத்த வங்கியினர் பெற்றுக்கொண்டு, சான்றிதழ்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ