திருப்பூர் : மாவட்ட அளவிலான இலக்கிய போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் பேச்சு, கவிதை, கட்டுரை எழுதும் திறனை வெளிப்படுத்தினர்.திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான இலக்கிய போட்டி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு நேற்றுமுன்தினமும், கல்லுாரி மாணவர்களுக்கு நேற்றும், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவருக்கு...
பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி முதல் பரிசு; கதிரவன் பள்ளி மாணவன் துரைமுருகன் இரண்டாம் பரிசு; பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரதிப்பிரியா மூன்றாம் பரிசு பெற்றனர்.கட்டுரை போட்டியில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா முதல் பரிசு; தாராபுரம் புனித அலோசியஸ் பள்ளி மாணவி வினோதினி இரண்டாம் பரிசு; நத்தக்காடையூர் அரசு பள்ளி மாணவி வர்ஷினி மூன்றாம் பரிசு.பேச்சுப்போட்டியில், கருவலுார் அரசு பள்ளி மாணவி நிரஞ்சனா தேவி முதல் பரிசு; லிட்டில் பிளவர் பள்ளி மாணவி சக்திஸ்ரீ இரண்டாம் பரிசு; நத்தக்காடையூர் அரசு பள்ளி மாணவி திரிஷலா மூன்றாம் பரிசு பெற்றனர். கல்லுாரி மாணவருக்கு...
கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை போட்டியில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி மாணவி தனலட்சுமி முதலிடம்; உடுமலை அரசு கலை கல்லுாரி மாணவர் மாரிமுத்து இரண்டாமிடம்; ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி மாணவி வித்யாபாரதி மூன்றாமிடம்.கட்டுரை போட்டியில், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவி ஜோதிபிரீத்தா முதலிடம்; உடுமலை கலை கல்லுாரி மாணவி கவுதமி இரண்டாமிடம்; ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி மாணவி முத்துலட்சுமி மூன்றாமிடம்.பேச்சுப்போட்டியில், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர் நாகராஜ் முதலிடம்; அவிநாசி அரசு கலை கல்லுாரி மாணவர் சஞ்சய்குமார் இரண்டாமிடம்; ஏ.வி.பி., பள்ளி மாணவி சவுமியா மூன்றாமிடம் பிடித்தனர்.கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு, 7 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு, 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், மாநில அளவிலான இலக்கிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.