மேலும் செய்திகள்
ஜோதிடம் என்பது உண்மையா?
20-Dec-2024
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், 'போதையில்லா தமிழ்நாடு' எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்: குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணமாக போதை பழக்கம் இருந்து வருகிறது. போதை பழக்கம் நல்ல மனிதனை கூட மிருகமாக மாற்றி விடும். மிருகம் கூட தனக்கு சார்ந்திருக்க கூடிய, நம்பியிருக்க கூடிய விலங்கினங்களை எதுவும் செய்யாமல், நட்பு ரீதியாக விட்டு விலகிச் சென்று விடும். ஆனால், போதைக்கு அடிமையான மனிதன் அப்படியல்ல. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிக்க காரணமே போதை பழக்கம்; போதைக்கு அடிமையானவர்கள் தான், காரணம். போதையின் பாதையில் பயணிப்பவருக்கு மூன்று வயது குழந்தை தெரியாது; 80 வயது மூதாட்டி தெரியாது. போதையின் பாதை நம்மை எங்கே கொண்டு சென்று விடும் என்பதை பலரும் உணராமல் தவறு செய்கின்றனர்; வாழ்வை இழக்கின்றனர்; எல்லையை மீறுகின்றனர். கல்லுாரி மாணவர், மாணவியர் உங்களால் முயன்றால் உங்கள் அருகில் உள்ள போதைக்கு அடிமையானவர்களை மீட்க முயற்சி எடுங்கள். போதை குற்றங்களை எடுத்துக்கூறி மீண்டு எழுந்து வர முயற்சி எடுங்கள். உங்களால் ஒருவர் மறுவாழ்வு பெற்றால், அவர்கள் தலைமுறையே உங்களை வாழ்த்தும்.
20-Dec-2024