துரத்தி கடிக்குதுதிருப்பூர், ஏழாவது வார்டு, போயம்பாளையம், கணபதிநகர், நான்காவது வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கிறது.- முபாரக்பாட்ஷா, கணபதி நகர். (படம் உண்டு)குழாய் உடைந்ததுதிருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., மெயின் ரோடு, ஒன்பது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- அமுதா, வி.ஜி.வி., கார்டன். (படம் உண்டு)பெருமாநல்லுார் - செங்கப்பள்ளி பை-பாஸ் சாலை அருகே, சர்வீஸ் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- பாரதி, பெருமாநல்லுார். (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, பாரப்பாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. சாலை சேதமாகிறது.- சங்கர்சதீஷ், பாரப்பாளையம். (படம் உண்டு)'சிலாப்' உடைந்ததுபெருமாநல்லுார் ஊராட்சி, ஈஸ்வரன் கோவில் வீதி, போலீஸ் ஸ்டேஷன் வளைவில் கழிவுநீர் கால்வாய் சிலாப் உடைந்துள்ளது.- குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)கம்பம் மோசமானதுதிருப்பூர், மணியாரம்பாளையம், எம்.சி., நகரில் கம்பி வெளியே தெரியும் வகையில், மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது.- விநாயகம், மணியகாரம்பாளையம். (படம் உண்டு)இப்படியும்பணி நடக்குது?திருப்பூர், செங்குந்தபுரம் மெயின் வீதியில், குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும்.- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)அவதி உண்டானதுதிருப்பூர், அனுப்பர்பாளையம், சத்யா நகர் விரிவு பகுதியில் ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- நிஷாந்த், சத்யா நகர் விரிவு. (படம் உண்டு)கால்வாய் அடைக்குதுதிருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே - அவுட், நான்காவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கிள்ளது.- கண்ணன், டி.எஸ்.ஆர்., லே-அவுட். (படம் உண்டு)கழிப்பிடம் மோசமானதுதிருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள மாநகராட்சி இலவச சிறுநீர் கழிப்பிடம் சுத்தம் செய்யப்படுவதே இல்லை. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.-- செந்தில்குமார், திருப்பூர். (படம் உண்டு)இடையூறாக உள்ளதுதிருப்பூர், யூனியன் மில் ரோட்டில், போக்குவரத்து விதி குறித்த அறிவிப்பு பலகை விழுந்து கிடக்கிறது. பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது.- சூர்யபிரகாஷ், யூனியன் மில் ரோடு. (படம் உண்டு)ரியாக் ஷன்குடிநீர் வந்தது....திருப்பூர், கணக்கம்பாளையம், கஸ்துாரிபாய் நகரில், 20 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படாமல் இருந்தது. 'தினமலர்' செய்திக்கு பின், தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.- சண்முகம், கஸ்துாரிபாய் நகர்.மண் கொட்டியானதுதிருப்பூர், பூலுவப்பட்டி - நெருப்பெரிச்சல் ரிங் ரோடு, தொட்டிபாளையம் வளைவில், சாலை சேறும், சகதியுமாக காணப்பட்டது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மண் கொட்டியுள்ளனர்.- விஜி, தோட்டத்துப்பாளையம். (படம் உண்டு)தெருவிளக்கு ஒளிர்கிறதுதிருப்பூர் ஆர்.வி.இ., லே-அவுட் முதல் குறுக்கு தெருவில் தெருவிளக்கு மூன்று மாதமாக எரியாமல் இருந்தது குறித்து செய்தி வெளியானது. தெருவிளக்கை சரிசெய்து விட்டனர்.- தண்டபாணி, ஆர்.வி.இ., லே-அவுட். (படம் உண்டு)