மேலும் செய்திகள்
பக்தர்களுக்கு நீர்மோர்
04-May-2025
திருப்பூர்; ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தாராபிேஷகம் நடந்து வரும் நிலையில், அர்த்தஜாம பூஜையில் படைக்கப்படும் பானகம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.அக்னி நட்சத்திர வெயில் துவங்கியதில் இருந்து, சிவாலயங்களில், தாராபிேஷகம் நடந்து வருகிறது. சிவலிங்க திருமேனிக்கு, தொடர்ச்சியாக தாராபிேஷகம் செய்யும் போது, கோடை மழை பெய்து பூமி குளிர்விக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.கோடை வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கவும், நீரிழப்பை சரிக்கட்டவும், மோர், பானகம் அருந்துவதும் வழக்கம். ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களில், பக்தர் களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.சிவாலயங்களில் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது, சிவபெருமானுக்கு, பானகம் படைக்கப்படுகிறது; அது, பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தினமும், 8:15 மணிக்கு, அர்த்தசாம பூஜை நடக்கிறது.சுவாமிக்கு, தண்ணீரில் வெல்லம், புளி, வாழைப்பழம், ஏலக்காய் கலந்து தயாரிக்கப்பட்ட பானகம் படைக்கப்படுகிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் போது, பானகமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
04-May-2025