உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெயிலில் காய்ந்தும்... குடிநீரை தேடியும் :அவிநாசி கோவிலில் பக்தர்கள் அவதி

வெயிலில் காய்ந்தும்... குடிநீரை தேடியும் :அவிநாசி கோவிலில் பக்தர்கள் அவதி

அவிநாசி;பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. இதற்கு கட்டணம், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேக தினத்தன்று சுவாமியை தரிசனம் செய்யாமல் திரும்பி சென்ற பக்தர்கள் பலர் நேற்று கோவிலுக்கு வந்தனர். இதனால், வரிசை கோவில் வாகன பார்க்கிங் பகுதியை தாண்டி நுழைவாயில் வரை நீண்டது. இதனால் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டனர்.இரண்டாம் பிரகாரத்தில் தி சென்னை சில்க்ஸ் குழுமத்தினர் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பத்தி கல் மண்டபத்தை புனரமைத்து கட்டிக் கொடுத்துள்ளனர். இதில் பக்தர்கள் இரண்டு வரிசையில் தாராளமாக நின்று வெயிலில் அவதிப்படாமல் நின்று சாமி தரிசனம் செய்வதற்கான வசதி உள்ளது. ஆனால், அதேநேரம், வெளி வளாகதத்தில், பக்தர்கள் கடும் வெயிலில் வரிசையில், கால் கடுக்க நின்றிருந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.ஒரு கட்டத்தில் சில பக்தர்கள் கோவில் அலுவலகம் சென்று கடும் வாக்குவாதம் செய்தனர். இதையறிந்த தன்னார்வலர்கள் உடனடியாக கோவிலுக்கு சென்று, தண்ணீர் பாட்டில்களை பக்தர்களுக்கு வழங்கினர். இதனால், நிலைமை மேம்பட்டது.இதுதவிர, கும்பாபிஷேக விழாவுக்காக ஆங்காங்கே போடப்பட்டிருந்த தரை விரிப்பை எடுத்து வந்து, பக்தர்கள் வெயிலில் நிற்கும் இடத்தில் விரித்து விட்டனர். பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யாதது குறித்து, செயல் அலுவலர் பெரியமருது பாண்டியனை தொடர்பு கொண்டும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.சேலத்திலிருந்து குடும்பத்துடன் வந்த தணிகாசலம் என்பவர் கூறுகையில், ''காலை 9.15 மணிக்கு வரிசையில் நின்றோம். 12:40 மணியளவில் தரிசனம் முடித்து வெளியில் வருகிறோம். குடிப்பதற்கு எங்கேயும் ஒரு சொட்டு தண்ணீர் ஏற்பாடு செய்யவில்லை. ஒரு சிறிய கோவிலில் கூட, கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ஏற்பாடு மண்டல பூஜை முடியும் வரை அன்னதானம் வழங்கப்படும். புகழ்மிக்க அவிநாசி கோவிலில் அன்னதானம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை