உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாய தொழிலாளர் போனஸ் தொ.மு.ச. வலியுறுத்தல்

சாய தொழிலாளர் போனஸ் தொ.மு.ச. வலியுறுத்தல்

திருப்பூர்; சாய ஆலை தொழிலாளர்களுக்கு, மூன்று மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திராவிட ஜின்னிங், டையிங், ஸ்கிரீன் பிரின்டிங் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுசெயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சாய ஆலைகளில் பணியாற்றும் டையிங் மாஸ்டர்களுக்கு, மூன்று மாத சம்பளம் போனஸாக வழங்க வேண்டும். சாப்ட்புளோ மற்றும் பாய்லெர் மென்களுக்கு, கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். பிரின்டிங் நிறுவனங்களில் பணியாற்றும் மாஸ்டர் பிரின்டர், உதவியாளர், ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி வந்தால், ஒரு மாதத்தில், ஒரு வார சம்பள அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளருக்கும், தீபாவளிக்கு, 10 நாள் முன்னதாக போனஸ் வழங்க வேண்டும். 'கான்ட்ராக்ட்' தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி