உள்ளூர் செய்திகள்

ஈனும்... தை

திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை அவயம் அளவீடு செய்யும் முகாம், மங்கலம் ரோடு, பூச்சக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாமும் நடந்தது. சக் ஷம் மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், தி ஐ பவுண்டேஷன் முகாம் ஒருங்கிணப்பாளர் அஸ்வின் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக டிக்ஸி நிறுவனத்தின் பிரேம்சிக்கா, ஈஸ்டர்ன் நிறுவன குளோபல் குமார் பங்கேற்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமவசந்தகுமார் பங்கேற்றார். 18 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்க அளவீடு செய்யப்பட்டது. கண் பரிசோதனை முகாமில், 54 பேர் பங்கேற்றனர்; 13 பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மண்டப நிர்வாகிகள் தம்பி வெங்கடாசலம், ராஜா, சக் ஷம் நிர்வாகிகள் கண்ணன், முத்துரத்தினம், ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை