உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த முதியவர் ஊசி போட்டு அதிகாரிகளிடம் சிக்கினார்

 எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த முதியவர் ஊசி போட்டு அதிகாரிகளிடம் சிக்கினார்

வெள்ளகோவில், நவ. 25-வெள்ளகோவில் அருகே, பத்தாம் வகுப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்த, 74 வயது போலி டாக்டர் பிடிபட்டார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி மெயின் ரோட்டில், சிறிய அறை ஒன்றில் மருந்து, மாத்திரை கொடுத்து, ஊசி செலுத்தி அலோபதி மருத்துவம் பார்த்து வந்த செல்லமுத்து, 74 மருத்துவ குழுவினரிடம் பிடிபட்டார். சிறிய அறையில் இரண்டு சேர், ஒரு டேபிளும், அறிவிப்பு பலகை எதுவும் இல்லாமல், தினமும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரா கூறியதாவது:சென்னை 104 அவசர ெஹல்ப்லைனுக்கு சென்ற புகார், கலெக்டர் வாயிலாக, எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. மருத்துவ கண்காணிப்பு குழுவில் உள்ள அலுவலர் ஒருவரை அனுப்பி, பரிசோதனை செய்ய செய்த போது, அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த போலிடாக்டர் செல்லமுத்து, மருந்து, மாத்திரை எழுதி கொடுத்ததுடன், ஊசி போடவும் முயற்சித்தார். அவரை கையும், களவுமாக பிடித்தோம்.காங்கயம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சந்திரசேகர், வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் கொண்ட குழுவினர் அறையில் இருந்து மருந்து, மாத்திரை, ஊசிகளை பறிமுதல் செய்து, அந்த அறைக்கு சீல் வைத்தனர். ஆவணங்களில் அவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தது தெரிந்தது. போலி டாக்டரை வெள்ளகோவில் போலீசில் ஒப்படைத்தோம். இவ்வாறு, அவர் கூறினார். கடந்த வாரம், தாராபுரம் அருகே, முத்தையன்பட்டியில், பிளஸ் 2 படித்து விட்டு, 10 ஆண்டாக கிளினீக் நடத்திய வெள்ளைச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சும்மா இருக்கிறேன்னு வைத்தியம் பார்த்தேன் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விசாரணையின் போது, '74 வயசுல நீங்கள் இப்படி தவறு செய்யலாமா? கைது நடவடிக்கை தாங்குவீங்களா,' என கேள்வி கேட்ட போது, 'எனக்கு எல்லாம் தெரியும்; அனுபவம் தான்; சும்மா இருக்கிறேன்னு வைத்தியம் பார்த்தேன்' என்று கூலாக சொன்னாராம் 'போலி' டாக்டர் செல்லமுத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை