உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருப்பூர் : மூலனுார் மூலக்கடை அடுத்துள்ள, ராமபட்டணம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 50; எலக்ட்ரீசியன். நேற்று காலை, 11:30 மணிக்கு, மின்மோட்டார் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டார்; அதற்காக, ராமபட்டணம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார் .ஒரே மின்கம்பத்தில், உயரழுத்த மின்சாரமும், தாழ்வழுத்த மின்சாரமும் செல்கிறது. தாழ்வழுத்த மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தில் ஏறி, பழுதுநீக்க முயற்சித்துள்ளார்; அப்போது, அவரது கை பட்டதால், உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது. கடுமையான தீக்காயத்துடன் கம்பியில் தொங்கியவரை, தீயணைப்புத்துறையினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்; நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக, மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை