உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் ராணுவ வீரர் நல சங்க கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் நல சங்க கூட்டம்

உடுமலை:முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் ஆலோனைக்கூட்டம் நடந்தது.உடுமலை லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கில், முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சங்கச்செயலாளர் சக்தி வரவேற்றார். கர்னல் மகேஷ்பாபு, சுபேதார் நடராஜ் முன்னிலை வகித்தனர்.சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். குடியரசு தின விழா கொண்டாடுவது குறித்தும், முன்னாள் ராணுவ வீரர்களின் பென்ஷன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் உடுமலை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.சங்கப்பொருளாளர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை