நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (22ம் தேதி) காலை, 11;00 மணிக்கு, உடுமலை நாடார் உறவின் முறையார் திருமண மண்டபத்தில், கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது.இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.