உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடரும் நாய்களின் ரத்த வேட்டை விவசாயிகள் போராட்ட எச்சரிக்கை

தொடரும் நாய்களின் ரத்த வேட்டை விவசாயிகள் போராட்ட எச்சரிக்கை

திருப்பூர்: தெருநாய் தாக்குதலில் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கால்நடைத்துறை பரிசீலித்து வருவதாக, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.காங்கயம், தாராபுரம் தாலுகா பகுதிகளில், தெருநாய்கள் இரவு நேரத்தில் பட்டியில் புகுந்து, ஆடுகளை கடித்து குதறி, கொல்வது அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் வலுத்து வந்தது.மாவட்ட நிர்வாகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, 45 நாட்களுக்குள் இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்தது. அவகாசம் முடிந்த பிறகு, மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட் டுள்ளது.இந்நிலையில், தினமும் தெருநாய்கள் புகுந்து, ஆடுகளை தாக்குவதும், ஆடு, கோழிகள் பலியாவதும் தொடர்கிறது.காங்கயம் தாலுகா, கீரனுார் கிராமம், விஜயரங்கன்வலசு பகுதியில், பொன்னாத்தாள் என்பவரின் பட்டியில் புகுந்த தெருநாய்கள், ஆடுகளை தாக்கின.ஐந்து ஆடுகள், நான்கு குட்டிகள் என, ஒன்பது ஆடுகள் நேற்று பலியாகின; சில ஆடுகள் பலத்த காயத்துடன் உயிர்தப்பின.விவசாயிகள் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் அவகாசம் வழங்கியுள்ளதால், இழப்பீடு அறிவிப்பு வரட்டும் என்று அமைதியாக இருக்கிறோம். இதற்கு பிறகும், நிவாரணம் மற்றும் தெருநாயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லாவிட்டால் அறவழி போராட்டம் வேகமெடுக்கும்'' என்றனர்.விரைவில் இழப்பீடுவருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது. தற்போது, கால்நடைத்துறை அமைச்சகத்தில் இதுதொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இழப்பீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும்; தெருநாய்களைகட்டுப்படுத்தும் பணி மற்றொருபுறம் துவங்கியுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை