உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருப்புக்கொடி கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கருப்புக்கொடி கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்லடம், பிப். 18--நேற்று, பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் கிராமத்தில், விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் பாமாயிலுக்கு, 1,500 கோடி ரூபாய் மானியமாக வெளிநாட்டுக்கு கொடுத்து, தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். பாமாயிலை தடை செய்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயை ரேஷன் கடைகளில் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை