உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாய்க்கால் துார்வாரும் பணி களம் இறங்கிய விவசாயிகள்

வாய்க்கால் துார்வாரும் பணி களம் இறங்கிய விவசாயிகள்

பொங்கலுார்;திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பதற்கு முன் குடிமராமத்து திட்டத்தின் கீழும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தியும் அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படுவது வழக்கம்.இந்தாண்டு நிதி இல்லை என்ற காரணம் காட்டி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிளை வாய்க்கால்கள் துார்வாருவதை அரசு கைவிட்டு விட்டது.இந்தாண்டு போதிய மழை இன்மையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பி.ஏ.பி., நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இன்மையால் ஐந்து சுற்றுக்கு பதிலாக, இரண்டரை சுற்று மட்டுமே தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.அரசு தன் கடமையை செய்வதை கைவிட்ட போதிலும், பல விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி, கிளை வாய்க்கால் துார்வாரும் பணியை விறுவிறுப்பாக செய்து முடித்துள்ளனர். இதனால், பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சேதாரம் இன்றி கடைமடைகளுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை