உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கத்தரி விலை சரிவு :விவசாயிகள் கவலை

 கத்தரி விலை சரிவு :விவசாயிகள் கவலை

உடுமலை: சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், கத்தரி விலை சரிந்து, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு கத்தரி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் கத்தரி உடுமலை தினசரி சந்தையில், விற்பனையாகிறது. கடந்த வாரம், 25 கிலோ கொண்ட பை கத்தரி 700 ரூபாய்க்கு விற்பனையானது; நேற்று விலை பை 300 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. பருவமழைக்கு பிறகு சந்தைக்கு பல மடங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி