உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; ரூ.பல லட்சம் மதிப்பு பொருள் சேதம்

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; ரூ.பல லட்சம் மதிப்பு பொருள் சேதம்

திருப்பூர்; திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை விரைந்து அணைத்த காரணத்தால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கொங்கு மெயின் ரோட்டில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.மூன்று தளங்கள் கொண்ட நிறுவனத்தில், முதல் தளத்தில் சாம்பிள், இரண்டு மற்றும் 3ம் தளத்தில் உற்பத்தி, பேக்கிங் பிரிவு செயல்பட்டு வருகிறது.பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று நிறுவனம் திறக்கப்பட்டது. பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். காலை, 11:30 மணியளவில் திடீரென தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதனை பார்த்த பணியாளர்கள் தீ தடுப்பான்கள் கொண்டு அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ அணையவில்லை. தகவலறிந்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இருப்பினும், அலுவலகத்தில் இருந்த மேஜை, பேன் உள்ளிட்ட பொருட்கள், சாம்பிள் துணிகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை