உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

 ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருப்பூர்: காங்கயம் அகிலாண்டபுரம், அண்ணா நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது வீட்டில், 10 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்காக வெளியே அனுப்பினார். அப்போது வீட்டுக்கு அருகே உள்ள பொது கிணற்றருகே மேய்ந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக, காங்கயம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி உள்ளே இறங்கி, கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்டு, ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை