உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனை சுறுசுறுப்பு

மீன் விற்பனை சுறுசுறுப்பு

திருப்பூர்:தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிறு என்றாலே மீன் விற்பனை அதிகரிக்கும். கடந்த, 14ம் தேதி பொங்கல், 21ம் தேதி தைப்பூசம், வளர்பிறை முகூர்த்தம் என அடுத்தடுத்த விசேஷ தினங்களால் இருவாரங்களாக மீன் விற்பனை சரிந்தது. நேற்று, காலை முதலே மீன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.வரத்து இயல்பாகியுள்ள நிலையில், மீன் விற்பனை குறைவு என்பதால், ஒவ்வொருவரும் இரண்டு முதல் நான்கு கிலோ வரை மீன் வாங்கிச் சென்றனர். இரண்டு வார இடைவெளிக்கு பிறகு நேற்று காலை முதல் மதியம் வரை மீன் விற்பனை சூடு பறந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை