உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு; தடை விதித்து கண்காணிப்பு

 அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு; தடை விதித்து கண்காணிப்பு

உடுமலை: தொடர் மழையால், பஞ்சலிங்க அருவியில், வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது; தடை தொடர்வதால், அருவிக்கு செல்ல முடியாமல், அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்து வரும் மழையால், திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியல், இரு நாட்களாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. பாதுகாப்பு கருதி, அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை தொடர்கிறது. சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், அய்யப்ப பக்தர்கள், திருமூர்த்திமலைக்கு வந்து பஞ்சலிங்க அருவியில் குளித்து அமணலிங்கேஸ்வரரை தரிசித்து செல்வார்கள். நேற்றும் அய்யப்ப பக்தர்கள் வருகை திருமூர்த்தி மலைக்கு அதிகம் இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அருவி மற்றும் கோவில் பகுதியில், கோவில் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பகலில், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறை வால்பாறையில், கடந்த மாதம் முதல் வடகிழக்குப்பருவ மழை துவங்கியது. இடையிடையே வெயில் கலந்த பனிமூட்டம் நிலவியதால், வால்பாறையில் காலை, மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவியது. இந்நிலையில் நேற்று முன் தினம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பரவலாக பெய்த மழையினால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையினால் உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் மகிழ்ச்சியடைந்தனர். மழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 146.05 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 299 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 956 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): திருமூர்த்தி அணைப்பகுதியில், 31 மி.மீ., அமராவதி அணை - 45 நல்லாறு - 21, பெதப்பம்பட்டி - 5, சோலையாறு - 6, பரம்பிக்குளம் -6, ஆழியாறு -9, வால்பாறை - 5, மேல்நீராறு - 37, கீழ்நீராறு - 10, காடம்பாறை - 8, சர்க்கார்பதி - 28, துணக்கடவு - 6, பெருவாரிப்பள்ளம் - 5.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை