உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடகு கடையில் 5 கிலோ நகை அபேஸ் கில்லாடி ஊழியர்கள் நான்கு பேர் கைது

அடகு கடையில் 5 கிலோ நகை அபேஸ் கில்லாடி ஊழியர்கள் நான்கு பேர் கைது

திருப்பூர்:கோவை மாவட்டம், வால்பாறையை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டியன், 44. இவர், திருப்பூர், வால்பாறை, பொள்ளாச்சி, பழனி, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.திருப்பூரில், நான்கு கடை நடத்தி வருகிறார். ஒவ்வொரு கடையிலும், கண்காணிப்பாளர், உதவியாளர் இருவர் என, மூன்று பேர் வேலை செய்கின்றனர்.சமீபத்தில், சுரேஷ்பாண்டியன் கரட்டாங்காடில் உள்ள கடையில் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அதில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2.50 கிலோ தங்கம் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்தனர். நகைகளை அடகு பெறாமலே, அடகு வைத்த மாதிரி கணக்கு காட்டி, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ நகைகளை மோசடி செய்தது தெரிந்தது.அதுபோல, அடகு வைத்து பல மாதங்களாக மீட்கப்படாமல் இருந்த, 1.5 கிலோ நகைகளை வேறு கடை, வங்கிகளில் மறு அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்ததும் தெரிந்தது.இந்த மோசடி தொடர்பாக, கடை ஊழியர்கள் அருண்குமார், 23, உதவியாளர்கள் பிரதீப், 27, மற்றும் உதவி செய்த சக்திவேல், 30, ஆகியோரை போலீசார் கைது செய்து, பிற கடைகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளில், 1 கிலோவை மீட்டனர்.இதேபோல மோசடியில் ஈடுபட்ட, நல்லுார் கடையில் பணியாற்றிய கோபிநாத், 36, என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 50 சவரன் நகைகளை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை