இலவச பல் பரிசோதனை
திருப்பூர் சேவாபாரதி சார்பில், இலவச பல் பரிசோதனை மருத்துவ முகாம், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் அருண், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், பல் பரிசோதனை செய்தனர். பொதுமக்கள் 50 பேருக்கு பல் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. பல் பாதுகாப்பு குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.