உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  46 பேருக்கு இலவச பட்டா

 46 பேருக்கு இலவச பட்டா

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே முத்துார் பேரூராட்சியில், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. கனகதாரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், 46 பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். முன்னதாக, நல்லிக்கவுண்டன் புதுாரில், ஒருங்கிணைந்த நீர் வள மேம்பாட்டு திட்டத்தில், 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாலை மற்றும் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. காங்கயம் சட்டசபை தொகுதியில் இதுவரை, 2,893 புதிய பட்டாக்களும், 6,830 இ-பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !