பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவ பிரதிநிதிகள் பதவியேற்பு
திருப்பூர்; திருப்பூர், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு முறையில், மாணவர்கள், தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து, மாணவ தலைவர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பதவியேற்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். மாணவ தலைவராக தயாதரன், துணைத் தலைவராக நிதுலன், மாணவியர் தலைவியாக அஸ்வதா, துணைத் தலைவராக ஐஸ்வர்யா, விளையாட்டுத்துறை தலைவராக மாணவர் பார்த்தசாரதி, துணை தலைவராக ரக் ஷிதா மற்றும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவர் அணி தலைவர்கள் பதவியேற்றனர். பள்ளி முதல்வர் லாவண்யா, தலைமையாசிரியை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.