உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் சிலிண்டர் முறைகேடு; நுகர்வோர் அமைப்பு புகார்

காஸ் சிலிண்டர் முறைகேடு; நுகர்வோர் அமைப்பு புகார்

திருப்பூர் : நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம், கலெக்டர் கிறிஸ்து ராஜிடம் அளித்த மனு:திருப்பூர் மாவட்டத்தில், 88 காஸ் ஏஜென்சிகள் உள்ளன. திருப்பூர் மாநகர பகுதியில் மட்டும் 48 இயங்குகின்றன. சில ஏஜென்சிகள், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரில் உள்ள காஸை, 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டருக்கு மாற்றி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன.குறிப்பாக, தாராபுரம், உடுமலை, காங்கயம் பகுதிகளில் உள்ள ஏஜென்சியினர், சரக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து, திருப்பூரில் உள்ள ஓட்டல், பேக்கரிகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். வீட்டு உபயோக சிலிண்டரில் உள்ள காஸை, வர்த்தக சிலிண்டருக்கு மாற்றி விற்பனை செய்யும் ஏஜென்சிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை