உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஜி.எச். பாதுகாப்புக்கு பணிகளுக்கு ஸ்டார் ரோட்டரி ஏற்பாடு

 ஜி.எச். பாதுகாப்புக்கு பணிகளுக்கு ஸ்டார் ரோட்டரி ஏற்பாடு

உடுமலை: உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மருத்துவமனையில், நிழற்கூரை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. உடுமலை அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வழித்தடத்தில் நிழற்கூரை, பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் பாதுகாப்பிற்காக இரும்பு கேட் உள்ளிட்ட திட்ட பணிகள், உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில், மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் வருடாந்திர மாவட்ட ஆளுநர் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் கார்த்திகேய பிரபு தலைமை வகித்தார். சேவை திட்டங்கள் குறித்து சங்கச்செயலர் மணிகண்டபிரபு அறிக்கை வாசித்தார். மாவட்ட ஆளுநர் தனசேகர் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார். உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் மலர்வண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை