உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேலோ இந்தியாவில் தங்கம்; திருப்பூர் வீரருக்கு பாராட்டு

கேலோ இந்தியாவில் தங்கம்; திருப்பூர் வீரருக்கு பாராட்டு

திருப்பூர் : 'கேலோ இந்தியா' போட்டியில், 110மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றிய, திருப்பூர் வீரருக்கு பாராட்டுகள் குவிகிறது.திருப்பூரை சேர்ந்தவர், விஷ்ணுஸ்ரீ. சென்னையில் நடந்து வரும் 'கேலோ இந்தியா' போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்றுள்ளார். கடந்த, 23ம் தேதி நடந்த, ஆடவருக்கான, 110மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், பங்கேற்ற இவர், 13.77 நொடிகளில், வெற்றி இலக்கை எட்டி, முதலிடம் பெற்றார். மகாராஷ்டிரா, கேரளா வீரர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை கைப்பற்றினர்.கேலோ இந்தியா போட்டியில் தமிழகம் (திருப்பூர்) சார்பில் பங்கேற்று, முதலிடம் பெற்று, தங்கம் பதக்கம் பெற உதவிய விஷ்ணுஸ்ரீ க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவரது பயிற்சியாளர் அழகேசன், விஷ்ணு ஸ்ரீ யை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை