உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடை தொழிலுக்கு நல்ல செய்தி கிடைக்கும்

பின்னலாடை தொழிலுக்கு நல்ல செய்தி கிடைக்கும்

திருப்பூர்:''உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு, பின்னலாடை தொழிலுக்கு நல்ல செய்தி கிடைக்கும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.'உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024', சென்னையில் நேற்று துவங்கியது. இதில் 30 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.திருப்பூர் பின்னலாடை தொழில்துறை சார்பில், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாட்டு நிகழ்ச்சிகள், திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:உலக தரத்துடன், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வர்த்தக பொருளாதாரம், 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக (ஏறத்தாழ 83 லட்சம் கோடி ரூபாய்) உயர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார். இலக்கை அடையும் வகையில், 30 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், தொழில் முதலீடு செய்வதற்கான சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 6,600 கோடி ரூபாய்க்கும் அதிமான தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு, பின்னலாடை தொழிலுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ