உள்ளூர் செய்திகள்

425 இடத்தில் கோபூஜை

திருப்பூர் ; திருப்பூர் கோட்ட கோ சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் கூறியதாவது:தன் சகோதரர் பலராமனுடன், அவர் முதன் முதலில் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற நிகழ்வு விழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாள் கோபாஷ்டமி என்று தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் மிகவும் விமரிசையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பசுக்கள், பசு மடம் ஆகியவற்றை துாய்மைப்படுத்தி, பசுக்களுக்கு நிறைவான உணவளித்து, அலங்கரித்து பூஜித்து வழிபடுவது சிறப்பு. இதனால், கோ பூஜை செய்யுமிடம் புனிதமடையும், கோ பூஜை செய்வோர் சகல ஐஸ்வர்யம் பெறுவர். அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று, வீடு, தோட்டம், கோவில்கள் என 425 இடங்களில், கோ சேவா சமிதி சார்பில் கோ பூஜை நடத்துகிறோம். பக்தர்கள் பங்கேற்று பிறவி புண்ணியம் அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை