உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்:தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன், நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். தேர்தல் கால வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும். புதிய டென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !