உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்: மாணவர்கள் மீது கூடுதல் கவனம்

பொதுத்தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்: மாணவர்கள் மீது கூடுதல் கவனம்

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை அடைய மாணவர்களின் உடல்நலத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் முதல் துவங்குகிறது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடங்கள் முடிக்கப்பட்டு, திருப்புதல் தேர்வுகள் நடக்கிறது.உடுமலை சுற்றுப்பகுதியில் மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வுகளையும் பொதுத்தேர்வு நடைமுறையில் நடத்துகின்றனர்.தேர்வில் மதிப்பெண் குறையும் மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தியும், அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கின்றனர்.அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களுக்கு இப்போது முழுமையாகவே தேர்வு பயிற்சி தான் வழங்கப்படுகிறது. முதல் திருப்புதல் தேர்வில், பின்தங்கிய மாணவர்களை இரண்டாம் தேர்விலும் கண்காணிக்கின்றோம்.அதிலும் குறைவாக செயல்படும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி தயார்படுத்துகின்றனர்.விடுமுறை நாட்களில் அவர்களுக்கான சிற்றுண்டிகளை பள்ளிகளின் சார்பில் வழங்கி, பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். மேலும், இந்த நேரத்தில் மாணவர்களின் உடல்நலத்தில் கவனமாக இருப்பதும் அவசியம்.அதனால், அவர்களின் பெற்றோரிடம் மாணவர்கள் நன்றாக உணவு எடுத்துகொள்வதையும், நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாக இருப்பதையும் தொடர்ந்து அறிவுறுத்திவருவதோடு, மாணவர்களிடமும் நேரடியாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ