உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி ஆண்டு விழா: மாணவர்கள் அசத்தல்

அரசு பள்ளி ஆண்டு விழா: மாணவர்கள் அசத்தல்

பல்லடம்:பல்லடம் அடுத்த, கேத்தனுார் அரசு துவக்க பள்ளி, 11ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி, மருத்துவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆண்டு விழாவை முன்னிட்டு, நடனம், நாட்டியம், பாட்டு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பழனிசாமி, கிருஷ்ணசாமி மற்றும் ஊர் பிரமுகர்கள் விவேகானந்தன், சுதர்சனா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ