மேலும் செய்திகள்
நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
28-Apr-2025
உடுமலை; பல்வேறு காரணங்களால், நிலக்கடலை சாகுபடியில், விளைச்சல் குறைந்துள்ளதால், உடுமலை பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை சின்னவீரம்பட்டி, ஆண்டியூர், தேவனுார்புதுார் சுற்றுப்பகுதிகளில், முன்பு மானாவாரியாகவும், இறவை பாசனத்துக்கும் நிலக்கடலை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது.காட்டுப்பன்றிகளால் சேதம், போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், இச்சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.கடந்த சீசனில் குறைந்த பரப்பில், நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. பயிரின் வளர்ச்சி தருணத்தில், போதிய மழை இல்லாமல், அதிக வெயில் நிலவியது. இதனால், பூ விடுதல் பாதிக்கப்பட்டது.சீதோஷ்ண நிலை மாற்றத்தால், இச்சாகுபடியில் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், ஏக்கருக்கு, ஆயிரம் கிலோவுக்கும் குறைவாகவே நிலக்கடலை விளைந்துள்ளதால், உடுமலை வட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
28-Apr-2025