உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் வளர்ச்சி.. நிச்சயம்... சாத்தியம்!

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் வளர்ச்சி.. நிச்சயம்... சாத்தியம்!

திருப்பூர்; புதிய வர்த்தக வாய்ப்புகளை குவிக்க, பருத்தி ஆடைகள் மட்டுமல்லாது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும், திருப்பூர் தொழில்துறையினர் வலுவாக கால்பதிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி என்பது, பலகட்ட ஆராய்ச்சிகள் வாயிலாக, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் புதிய வளர்ச்சி பெற்று வருகிறது; பொதுமக்களும், புத்தாக்க செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்; ஆதரிக்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி, பெரும்பாலும் பருத்தி நுாலிழை ஆடைகளை சார்ந்தே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்தால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, 10 முதல், 15 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளது.திருப்பூரை பொறுத்தவரை, பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சி என்பது சாத்தியமாகும். தற்போது, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது; அடுத்த ஆண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். திருப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் மட்டுமே சாத்தியமாகும் என்பது, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

PalaniKuppuswamy
ஜூலை 17, 2025 07:40

செயற்கை நூலிழை தயாரிப்பு பருத்தி தாரிப்புக்லை முனேறதை தடுத்து நிறுத்தும். மேலும் செயற்கை இழை தோல் நோய்களை உருவாக்கும் . விவசாயத்திற்கு எதிரி செயற்கை நூலிழை. பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொள்ள கூடாது, தார்மீகம் தொழில் தர்மம் வேண்டும்


visu
ஜூலை 17, 2025 21:12

ஏற்கனவே நீங்கள் உடுத்தும் பல ஆடைகள் பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் செயற்கை நூலிழையால் ஆனதுதான் பருத்தி ஆடைகள் டீ ஷர்ட் உள்ளாடைகள் போன்ற தயரிப்புகளில் மட்டும் பயன்பட்டு வருகிறது இல்லாவிட்டால் காட்டன் ப்ளேன்ட் என்ற வகையில் வரும்


சமீபத்திய செய்தி