ரேஷன் அரிசி கடத்தல் ஆசாமி மீது குண்டாஸ்
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த மாதம், 9ம் தேதி, கோவையில் இருந்து சூலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. அண்ணா நகர் பஸ் ஸ்டாப்பில் வைத்து லாரியை மடக்கினர். 11.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. சேலத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய ஹரிஹரபாண்டியன் என்பவர், தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால், கலெக்டர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.