உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துப்பாக்கிக்கு வேலை இல்லை

துப்பாக்கிக்கு வேலை இல்லை

திருப்பூர் மாவட்டத்தில், உரிமம் பெற்று பயன்படுத்தி வரும், 400 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கட்சியினர் அமைத்துள்ள பேனர்கள், கொடிக்கம்பம், பெயர் பலகை அகற்றப்பட்டு வருகின்றன. உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளோர் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 400 மற்றும் மாநகரில், 61 என, 461 பேர் உரிமம்பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.தேர்தல் விதிமுறை அமலுக்கு பின், நேற்று மாவட்டத்தில், 340 பேரும், மாநகரில், 60 பேர் என, மொத்தம், 400 பேர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்து உள்ளனர்.இன்னும் சில நாட்களில், அனைத்து துப்பாக்கிகளும் பெறப்பட்டு விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை