உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குட்கா, கஞ்சா, மது விற்றவர்கள் கைது

 குட்கா, கஞ்சா, மது விற்றவர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தெற்கு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பரதேசி, 24, என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் 2.4 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தெற்கு போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ரூபேஸ் குமார், 20 என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவரிடம் 200 கிராம் எடையில் கஞ்சா சாக்லெட் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதே போல் நல்லுார் போலீசார் புதுார் பிரிவில் நடத்திய சோதனையின் போது, விகாஷ், 19 என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 600 கிராம் எடையில் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். வீரபாண்டி போலீசார், முருகம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள டாஸ்மாக் பார் அருகே, மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. அதில் ஈடுபட்ட பிரதீப், 47 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்றவர்கள் கைது பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில், லாட்டரி டிக்கெட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஆறுமுகம், 55 மற்றும் சுரேஷ், 44 ஆகியோர் லாட்டரி விற்பது தெரிந்தது. வழக்கு பதிந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை