உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிறர்க்கென வாழ்பவரே வாழ்வார் தேசிய இளைஞர் தின விழா: சிக்கண்ணா மாணவர் தேர்வு 

பிறர்க்கென வாழ்பவரே வாழ்வார் தேசிய இளைஞர் தின விழா: சிக்கண்ணா மாணவர் தேர்வு 

திருப்பூர்;மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில், இன்று முதல் வரும், 16ம் தேதி வரை, தேசிய இளைஞர் தினவிழா நடக்கிறது.மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நடத்தும் இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோவை பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில் இருந்து, பத்து பேர் தேர்வாகியுள்ளனர். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் இருந்து, வரலாற்றுத்துறை மாணவர் தினேஷ்கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா பயணமாகிய மாணவரை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் சங்கமேஸ்வரன், குருசந்திரன், சக்திசெல்வம், சத்யா மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை