உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரலாறு படிப்பதில் அதிகரிக்கும் ஆர்வம் : தேசிய கருத்தரங்கில் பெருமிதம்

வரலாறு படிப்பதில் அதிகரிக்கும் ஆர்வம் : தேசிய கருத்தரங்கில் பெருமிதம்

திருப்பூர் : 'தமிழகத்தின் பொக்கிஷம் வரலாறா, கலாசாரமா, பண்பாடா அல்லது தொல்லியல் பொருட்களா?' என்ற தலைப்பில் தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கு, திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் எழிலி, தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் கிரிஜா ஆரோக்கியமேரி வரவேற்றார்.விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வீரராகவன் பேசுகையில், ''கடந்த, 36 ஆண்டுகளாக தொல்லியல் சார்ந்த சிற்பம், கட்டடம், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டு, நாணயங்கள் என பல வரலாற்று சின்னங்களை கண்டறிந்து, அதுகுறித்த தகவல்களை பதிவு செய்துள்ளோம். வரலாற்று ஆய்வு துறையில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன,'' என்றார்.விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீதர் பேசுகையில், ''இந்த தேசிய கருத்தரங்கில், 190 ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. இளம் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களிடம் இருந்து தான் ஆய்வுக்கட்டுரைகளை அதிகம் கேட்டு பெறுகிறோம்,'' என்றார்.இலங்கை, கெலான்யா பல்கலை., பேராசிரியர் நடீஸா குணவர்த்தனா, தமிழ்நாடு - இலங்கை இடையேயான கலாசார பிணைப்பு குறித்து, 'வீடியோ கான்பரன்ஸிங்' வாயிலாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை